Tuesday, 3 February 2015

முல்லைப் பெரியாறு அணை நோக்கம்



முல்லைப் பெரியாறு அணை நோக்கம்


 பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் நீரை கிழக்கு நோக்கித் திருப்பி, மழைமறைவுப் பகுதியான மதுரை மாவட்டத்திற்குப் (சென்னை மாகாணம்) பயன்பட வகை செய்வதற்காகவே இவ்வணை கட்ட திட்டமிடப்பட்டது. அப்பகுதிகளுக்கு அங்குள்ள சிறிய ஆறான வைகையாற்றின் நீர்வளம் போதுமானதாக இல்லை.  அணை கட்டியதால் உருவான தேக்கடி நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி சுரங்கம் வழியாக வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. முதலில் அணையிலிருந்து குமுளிக்கு அருகிலுள்ள ஃபோர்பே அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து கீழ் பெரியாறிலுள்ள பெரியாறு மின்சக்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின் அங்கிருந்து சுருளியாற்றுக்கும், அதிலிருந்து வைகையாற்றையும் அடைகிறது.

No comments:

Post a Comment