Friday, 6 February 2015

மணி மண்டபம்




முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம், கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1 கோடி செலவில் வெண்கலத்திலான பென்னிகுவிக் உருவச் சிலையுடனான மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மணிமண்டபம் ரூபாய் 1.25 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா ஜனவரி 15, 2013 அன்று திறந்து வைத்தார்.

Tuesday, 3 February 2015

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்


தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் முல்லைப் பெரியாறு அணை இல்லாத போது மக்களின் நிலை



இந்த நிழற்படம் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டது இல்லைமுல்லை பெரியார்அணை கட்டபடுவதர்க்கு முன்பு நம் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது.
முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது. அதன் காரணமாக இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால்பல்வேறு நாடுகளுக்கு உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் பர்மா ,மலேசியா,
மொரீசியஸ் மக்கள் அங்கு அனுப்பப்பட்டனர் இன்னும் நம் மக்கள் அங்கு 
வாழ்வதுகுறிப்படத்தக்கது.

இத்தகைய பஞ்சத்தை பார்த்து மக்கள் மடிவதை பார்க்க சகிக்காமல் தான்
பென்னி குயிக் என்பவர் அரசாங்கம்  நிதி உதவி செய்ய முன்வராத போது கூட  தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார்.

 

 

போராட்டங்கள்



போராட்டங்கள்


முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு இல்லை என்கிற அச்சத்தில் கேரள அரசியல் கட்சிகளும், பாதுகாப்புடன் பலமாக இருக்கிறது என்கிற நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் உள்ளன. கேரள அரசியல் கட்சியினர் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று பல்வேறு போராட்டங்களைச் செய்து வருகின்றனர். தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் குமுளியிலும் பதற்றம் நிலவுவதால் இரு பகுதிகளிலும் இரு மாநிலக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இந்நிலையில் அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.

சிக்கல்


1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த 2006 இல் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்க மறுத்தது. மார்ச் 18,2006 இல் தேதி கேரள சட்டமன்றத்தில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயம் செய்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ் வழக்கின் தீர்வை மே 7, 2014 இல் அறிவித்தது.
தீர்ப்பின் விவரம்:
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுத்து கேரள அரசு சட்டம் நிறைவேற்றி இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே அச்சட்டம் ரத்து செய்யப்படுகிறது.
  • மத்திய நீர்வளக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தலைவராகக் கொண்ட மூன்று பேர் குழுவின் கண்காணிப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும். 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இக்குழு அமல்படுத்த வேண்டும்.
  • இந்த குழுவில் தமிழகம் சார்பில் ஒருவரும் கேரளா சார்பில் ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும். இக்குழுவின் அலுவலகம் கேரளத்தில் அமைய வேண்டும்.குழுவின் செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
  • அணையின் நீர்மட்டத்தை உறுதி செய்வதுடன், பருவமழை காலங்களில் அணையின் நீர்மட்டம், பாதுகாப்பு குறித்து இக்குழு கண்காணிக்கும்.
  • உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் சார்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இக்குழு அனுமதி அளிக்க வேண்டும். *அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநில அரசுகளுக்கும் இக்குழு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். அந்த உத்தரவை இரு மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும்.
  • புதிய அணை கட்டும் விஷயத்தில், கேரள அரசு தன் முடிவை தமிழகத்தின் மீது திணிக்க முடியாது. புதிய அணை கட்டுவதென்றால், அது இரு மாநில அரசுகளின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும்.
35 ஆண்டுகளுக்கு பிறகு , அணையின் நீர் மட்டம் 142 அடியை, 20 நவம்பர் 2014 அன்று எட்டியது

கடலுக்குச் சென்ற தண்ணீர்


136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால் 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.

ஆனந்த் குழு

முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய 2010 பிப்ரவரியில் இந்திய உச்சநீதி மன்றத்தால் ஒரு குழு நியமிக்கப்பட உத்திரவிடப்பட்டது. இதன்பேரில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி . எஸ். ஆனந்தைத் தலைவராகவும், இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி. டி. தட்டே, இந்திய அரசின் நீர் ஆணையத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் பி. கே. மோஹதா, தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி . ஆர். லட்சுமணன், கேரள அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு ஐந்து பேர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு ஏப்ரல் 25, 2012 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அறிக்கையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.